தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே தியாகசமுத்திரம் காவேரி ஆற்றின் கரையிலுள்ள ஸ்ரீ மஹா புற்று மாரியம்மன் ஆலய திருவிழா நடந்தது.
கடந்த 23 ந் தேதி பூச் சொரிதல் நடந்தது. 28 ந் தேதி அம்மன் வீதி உலா வந்தது. நேற்று ஏராளமானவர்கள் சக்தி கரகம், பால்குடம், காவடி முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்து கோயிலை அடைந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு அம்மன் வீதி உலா வந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். காவேரி ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம், பால்குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள், கிராம மக்கள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.