Skip to content
Home » கரூர் கபடி போட்டி….. திருச்சி அணி வெற்றி

கரூர் கபடி போட்டி….. திருச்சி அணி வெற்றி

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா கொள்ளுத் தண்ணிப்பட்டியில் கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான இருபாலருக்கான கபடி போட்டி 2நாள்  நடைபெற்றது. இந்த போட்டியில் தேனி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் 18 அணியினரும், ஆண்கள் 60 அணியினர் என மொத்தம் 78 அணிகள் போட்டியில் பங்கேற்று விளையாடினர். இந்த போட்டிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியின் கேப்டனும்,முன்னாள் தமிழ்நாடு அணியின் கேப்டனுமான அஜித்குமார் கலந்து கொண்டார்.

நேற்று முதல் நாள் ஆட்டத்தில் பெண்கள் அணியினர் லீக் முறையில் விளையாடினர். இன்று ஆண்கள் காலை முதல் இரவு வரை நாக்அவுட் முறையில் விளையாடினர்.

இன்று நடைபெற்ற ஆண்களுக்கான போட்டியின் இறுதியில் திருச்சி SMHSS பள்ளி அணியும், சேலம் VPKCHSS அணியும் மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்ததால் ஒரு புள்ளி வித்தியாசத்தில் ஆட்டம் தொடர்ந்தது. ஆட்டத்தின் இறுதியில் திருச்சி அணி 19 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், சேலம் அணி 18 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தையும் பிடித்தது. மூன்றாவது இடத்தை திண்டுக்கல் குருவப்பா அணி பெற்றது. நான்காவது இடத்தை கரூர் செங்குலம் அணி பெற்றது.

வெற்றி பெற்ற அணிகளுக்கு கல்லூரியின் முதல்வர் கோப்பை, பரிசு பணம், சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும் பரிசு வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *