திருச்சி திருவெறும்பூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான கே என் சேகரன் -சித்ரா (எ) நவமணி இவர்களின் மகளும் திருவெறும்பூர் திமுக பகுதி செயலாளரும் 40வது வார்டு மாநகராட்சி கவுன்சிலருமான எஸ் சிவக்குமார் சகோதரியுமான எஸ் நந்தினி எம் இ இவருக்கும்
திருவெறும்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் முருகேசன் மகள் கல்யாண சுந்தரி சுந்தரராஜன் தம்பதியரின் மகனுமான எஸ். பால ஆனந்த் பிஇ ஆகியோருக்கு திருமணம் திருச்சி வயலூர் முருகன் கோவிலில் நடந்தது.
அதன் வரவேற்பு விழா திருவெறும்பூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசியதாவது
திருவெறும்பூர் பகுதியில் அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் திருவெறும்பூர் முன்னாள் எம்எல்ஏவான சேகரன் சிறப்பாக செயல்பட்டார் அதற்கு உதாரணமாக நவல்பட்டு அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் வீட்டு வசதி வாரியத்திடம் அதற்கான பட்டா இருந்தது அதனை கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது கலைஞரின் வழியில் வீட்டின் உரிமையாளர்களுக்கு பெற்றுத் தந்தார்.
அதைப் போல திருவெறும்பூரில் காவேரி குடிநீர் திட்டத்தை பெற்று தந்தவர். 2016 திருவெறும்பூரில் அன்பின் மகேஷ் பொய்யாமொழி வெற்றிக்காக பாடுபட்டதோடு அவரை தன்னைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தவர்
2016 திருவெறும்பூர் தொகுதியில் மட்டும் தான் நான் பிரச்சாரத்திற்கு வந்தேன் திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவாக அன்பின் மகேஷ் பொய்யாமொழி அன்று தேர்ந்தெடுக்கப்பட்டதிற்கும் இன்று அமைச்சர் ஆனதிற்கும் முக்கிய பங்கு கே என் சேகரனுக்கு உண்டு என்று கூறி மணமக்களை வாழ்த்தினார்.
திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமானஅன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசியதாவது
2016 ஆம் ஆண்டு தேர்தலில் நின்ற பொழுது நான் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டேன் அப்பொழுது மக்களுக்காக போராட்டம், ஆர்ப்பாட்டம் என நடத்துவதற்கு எப்படி என கற்றுக் கொடுத்தவர் சேகரன் மேலும் போராட்டம் நடத்தும் பொழுது காவல் துறை நண்பர்கள் கைது செய்ய முற்படும்பொழுது கைது செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்.
நேற்று உதயநிதி ஸ்டாலினின் பேச்சு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது அவரை பார்த்த பொழுது கலைஞரே பேண்ட் சர்ட் போட்டு வந்து பேசினால் எப்படி இருக்குமோ அப்படி அவரது பேச்சு இருந்தது,
மேலும் இந்த மணமக்களை கலைஞர் தமிழக முதல்வர் நேரில் வந்து வாழ்த்துவது போல் தற்பொழுது உதயநிதி ஸ்டாலின் வந்து வாழ்த்தியுள்ளார் என்றார்.
இந்த விழாவில் செய்தி தகவல் தொடர்பு துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் மற்றும் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்
விழாவின் முடிவு திருவெறும்பூர் முன்னாள் எம்எல்ஏ தற்போதைய தலைமை செயற்குழு உறுப்பினருமான கே என் சேகரன் நன்றி கூறிய பொழுது இந்த தருணத்தை தன்னால் தனது வாழ்நாளில் மறக்க முடியாது இதற்காக தனது பரம்பரையை ஒட்டுமொத்தமாக திமுகவின் வெற்றிக்கு பாடுபடும் நாங்கள் கலைஞரின் வளர்ப்பில் வந்தவர்கள் என நெகிழ்ச்சியுடன் கூறினார்.