சென்னை கடற்கரையில் மாற்று திறனாளிகளுக்கான மரப்பாலம் தற்போது பெய்து வரும் மழையினால் உடைந்தது. இது குறித்து அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது…..கடற்கரை ஒழுங்கு முறை ஆணைய உத்தரவின்படி கடற்கரையில் இரும்போ, கான்கிரீட்டோ உபயோகப்படுத்தக்கூடாது. மரம் மட்டும் தான் உபயோகப்படுத்தப்பட வேண்டும். மரத்தை உபயோகித்து அந்த பாலம் கட்டப்பட்டது. தற்போது இயற்கை சீற்றத்தினால் பழுதுபட்டு உள்ளது. மழை நின்றவுடன் உடனே சரி செய்து விடுவோம் என்று அவர் கூறினார்.