Skip to content

க.க.சாவடி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை-அடிப்படை வசதி கேட்டு மனு…

கோவை க.க.சாவடி பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு ஆறு வருடங்கள் ஆன நிலையில் தற்பொழுது வரை கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படவில்லை எனவும் கழிவறை வசதிகள் கூட இல்லை எனவும் அவற்றை கட்டித் தர வலியுறுத்தி அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுடன் வந்து கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில்… பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி தமிழ் வழி கல்வி என இரண்டு வகுப்பு மாணவர்களையும் ஒரே வகுப்பறையில் அமர வைத்து வகுப்புகள் எடுக்கப்படுவதாகவும், மாணவர்கள் பள்ளியின்

வெளியில் உள்ள பொதுக் கழிவறையையே உபயோகப்படுத்துவதாகவும் பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கென தனி கழிப்பறை இல்லை என தெரிவித்தனர். மேலும் அங்குள்ள வகுப்பறைகளும் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் மாணவர்களை பெரும்பாலும் வெளியில் அமர வைத்தே பாடங்கள் நடத்தப்படுவதாக தெரிவித்த பெற்றோர் மழைக்காலங்களில் மாணவர்கள் மிகவும் சிரமப்படுவதாக கூறினர். மேலும் அங்கு பள்ளி மாணவர்களுக்கென விளையாட்டு மைதானங்களும் இல்லை என தெரிவித்த அவர்கள் இது குறித்து பலமுறை அங்குள்ள அரசு நிர்வாகிகளிடம் புகார் மனு அளித்தும் தற்பொழுது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!