மத்திய உணவு பாதுகாப்பு ஆணையம் சார்பில் திருச்சி கே.கே.நகர் உழவர் சந்தைக்கு, பழங்கள் மற்றும் காய்கறி சந்தைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் பிரதீப் குமார், விவசாய துறை துணை இயக்குனர் சரவணனிடம் வழங்கினார். மேலும் மாநகராட்சி சில்லரை விற்பனையாளர்கள் 26 பேர், ஐமான் கல்லூரி கேட்டரிங் மாணவர்கள் 87 பேர், அரிசி வணிகம் செய்யும் 2 பேர் என மொத்தம் 257 பேருக்கு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு துணை நியமன அலுவலர் ரமேஷ் பாபு மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர். உணவு வணிகத்தில் ஈடுபடும் விற்பனையாளர்கள், உணவு பாதுகாப்பு பயிற்சி சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று கலெக்டர் வலியுறுத்தினார்.