கோவையில் 8 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசும் போது :-
சொத்து வரிக்கு அபராதம் விதிப்பதாக கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்தவர்,
ட்ரோன் சர்வே என்பதை முதல்வர் நிறுத்த சொல்லி விட்டார், சொத்து வரிகள் அபராத விதி என்று சொல்லுவதற்கு காரணம் என்னவென்றால், குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாக செலுத்தி விட்டால் இதற்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் குறைத்துக் கொள்கிறோம். அதே போல் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு செலுத்துபவர்களுக்கு அபராதம் வசூலிக்கிறோம். தற்போது முதல்வர் அதையெல்லாம் நிறுத்த சொல்லிவிட்டார். இனிமேல் வரி மட்டும் தான் வசூல் செய்வோம் என்று கூறினார், ஏற்கனவே ட்ரோன் சர்வே மூலம் விதிக்கப்பட்ட வரிகளும் ரத்து செய்யப்படும் என்று கூறியவர், வெள்ளலூரில் ஏற்கனவே பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது, அதனுடைய சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளது, திருச்சியில் இருந்து வந்து கோவையை இணைக்கும் சாலையில், சாலையை விரிவு படுத்தினால் மட்டும் தான் அது சாத்தியமாகும். தற்போது வரை நிறைய பணம் செலவு செய்யப்பட்டு இருக்கிறது, மாற்று ஏற்பாடு ஏதாவது செய்ய முடியுமா என்று பார்த்துக் கொண்டு இருப்பதாக, கூறினார். புறநகரில் ஒரு பேருந்து நிலையம் அமைப்பு தர வேண்டும் என்று இங்கு இருக்கிறவர்கள் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டால் அதற்கான பணிகளும் தொடங்கப்படும் என்றார்.
கவுண்டம்பாளையம் பேருந்து நிலையம் பயன்பாடு இல்லாமல் இருப்பதற்கு, அது என்ன என்பதை விரைந்து நடவடிக்கை எடுக்க பார்க்கிறோம் என்று தெரிவித்தார். சூயஸ் திட்டம் வருகிற 8 வது மாதத்திற்குள் முடிவடையும், ஆனால் அவர்கள் தற்போது தாமதப்படுத்தி இருக்கிறார்கள். தேசிய நெடுஞ்சாலையில் அனுமதி பெறுவது மற்றும் சாலைகளை தூண்டுவதில் தாமதம் ஏற்பட்டது. விரைவில் அனைத்து பணிகளும் முடிவு பெற்று சாலை அமைக்கப்படும் என்று கூறினார்.
கோவைக்கு வந்த முதல்வர் ஐந்து திட்டங்களை தொடங்கி வைத்து சென்றார், ஆனால் அதற்கான பணிகள் தொடங்கவில்லையே என்ற கேள்விக்கு,
ஹெல்த் அண்ட் வெல்னஸ் சென்டர் அடுத்த மாதம் திறக்க இருப்பதாகவும்,
சாலை பணிகளும் நடைபெற்று வருவதாகவும் விரைவாக பணிகள் முடியும் என்றும் கூறினார்.
கிராமங்களை, நகராட்சியுடன் இணைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே என்ற கேள்விக்கு,
கிராமங்களில் குப்பை கொட்டுவதற்கு இடம் இல்லை, விவசாயப் பகுதிகள் மொத்தமாக கட்டிடமான பகுதிகளை தான், ஊராட்சிகளை இணைக்கிறோம் , மனு கொடுத்தால் மீண்டும் அதை ஆய்வு செய்வார்கள் என்று கூறினார்.
நகராட்சிக்கு அருகில் இருக்கும் ஊராட்சிகளுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த இணைப்பை முன்னெடுத்தோம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அது குறித்து முதலமைச்சர், ஆய்வு செய்ய பரிந்துரைப்பார் என்று கூறினார். தொடர்ந்து பேசியவர், கோவை மாநகராட்சியில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க, தொழிற்சாலை தொடங்க இருக்கிறோம். முதலமைச்சரின் அனுமதியை பெற்று அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது. கோவை மட்டுமல்ல அருகில் இருக்கும் பகுதிகளில் இருந்தும் குப்பையை கொண்டு வந்து கொட்டுவதற்கு வசதிகளை செய்ய இருக்கிறோம் என்று கூறினார்.
தொடர்ந்து அண்ணாமலை குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு,
என்று தான் அண்ணாமலை இந்த ஆட்சியைப் பற்றி நல்லது சொல்லி இருக்கிறார். அவர் எப்பொழுதுமே மோசமானவைகளைப் பேசி தகுதியை மீறி கீழே இறங்கி கொண்டு இருக்கிறார். இது அவருக்கு அழகு அல்ல. ஆனால் மக்கள் எங்களோடு இருக்கிறார்கள். வருகிற தேர்தலிலும் முதலமைச்சர் தான் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவார் என்று கூறினார்.