அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் 472 நியாய விலைக்கடைகளிலும் கடந்த ஜீலை-2024 மாதத்திற்குரிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் பெறாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆகஸ்ட் -2024 மாதம் முழுவதும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, ஜீலை-2024 மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் ஆகஸ்ட் மாதத்தில் தங்கள் குடும்ப அட்டை இணைக்கப்பட்டுள்ள நியாய விலைக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
ஜூலை மாத பருப்பு-பாமாயில் ரேஷனில் பெற்று கொள்ளுங்கள்… அரியலூர் கலெக்டர்..
- by Authour
