Skip to content
Home » பிரபல ஸ்டெண்ட் டைரக்டர் ஜூடோ ரத்னம் காலமானார்..

பிரபல ஸ்டெண்ட் டைரக்டர் ஜூடோ ரத்னம் காலமானார்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பிரபல நடிகர்களுக்கு சண்டைப்பயிற்சி கற்றுக்கொடுத்தவர் ஜூடோ கே.கே.ரத்னம். இதுவரையில் 1500 படங்களுக்கு மேல் ஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றியவர் ஜூடோ ரத்னம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றவர். ரஜினியுடன் மட்டும் 46 படங்களுக்கு மேல் ரத்னம் பணியாற்றி இருக்கிறார். இறுதியாக 1992-ம் ஆண்டு வெளியான ‘பாண்டியன்’ படத்தில் ரஜினியுடன் ஜூடோ ரத்னம் ஸ்டெண்ட் டைரக்டரா பணியாற்றியுள்ளார். தவிர, ‘தாமரைக்குளம்’, ‘கொஞ்சும் குமரி’, ‘போக்கிரி ராஜா’, ‘தலைநகரம்’ ஆகிய படங்களில் நடித்தும் இருக்கிறார்.  இந்நிலையில், இன்று உடல்நலக்குறைவால் ஜூடோ ரத்னம் அவரது சொந்த ஊரான குடியாத்தத்தில் காலமானார். 93 வயதான அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக ஸ்டண்ட் யூனியன் சங்க அலுவலகத்தில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது உடல் குடியாத்தத்தில் நல்லடக்கம் செய்யபட உள்ளது. ஜூடோ ரத்னம் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *