Skip to content

பிக் பாஸ் புகழ்தர்ஷன் தன்னை தாக்கியதாக நீதிபதி மகன் பரபரப்பு புகார்…

  • by Authour

பிக் பாஸ் புகழ் தர்ஷன் தனது நண்பர்களோடு சேர்ந்து தாக்கியதாக ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் புகார் அளித்துள்ளார்.

உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி, சென்னையில் பிக் பாஸ் புகழ் தர்ஷன் குடியிருக்கும் வீட்டின் அருகே காரை பார்க் செய்துவிட்டு டீ குடிக்க சென்ற போது காரை எடுக்க சொல்லி தர்ஷன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அப்போது தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். பெண் மற்றும் நீதிபதியின் மகனை தாக்கியதாக ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஆதிசுடி, மகேஸ்வரி இருவரும் அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

dharshan

இதனிடையே நீதிபதியின் மகன் தங்களை தகாத வார்த்தைகளால் திட்டி தன்னையும், தம்பியையும் தாக்கியதாக பிக் பாஸ் புகழ் தர்ஷன் தரப்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தங்களை தாக்கிவிட்டு மருத்துவமனையில் படுத்து நாடகமாடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இருதரப்பு புகார் தொடர்பாக ஜெ.ஜெ.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!