கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை புழல் சிறையில் கைதிகளிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறை வளாகத்திலேயே கஞ்சா கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறை காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில், புழல் சிறையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரமேஷ், செந்தில் குமார் திடீர் சோதனை மேற்கொண்டனர். சிறைவாசிகளுக்கான வசதிகள், உணவு தரம் குறித்து நீதிபதிகள் ஆய்வு மேர்கொண்டனர். தனிமைச் சிறை, உயர் பாதுகாப்பு சிறை, பெண்கள் சிறை ஆகியவற்றையும் நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
புழல் சிறையில் நீதிபதிகள் திடீர் சோதனை..
- by Authour
