தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்ட கவர்னர் ரவி, 2 மசோதாக்களை மட்டும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார். அத்துடன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்ய விடாமல் கவர்னர் முட்டுக்கட்டை போடுகிறார் அரசியல் சாசனம் 200ன்படி கவர்னர் செயல்பட அறிவுறத்த வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழ்ககு தொடர்ந்தது.
இந்த வழக்கு கடந்த 3 தினங்களாக உச்சநீதிமன்றத்தில்ந டந்து வந்தது. இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதி பர்திவாலா பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
கவர்னருக்கான அதிகாரத்தை அரசியல் சாசனத்தில் அம்பேத்கார் தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளார். கவர்னர் தன் விருப்பப்படி செயல்பட இடமில்லை. மசோதாக்களில் உள்ள முரண்பாடுகளை முதலில் அரசுக்கு வெளிப்படையாக கவர்னர் சுட்டிக்காட்டி இருக்கலாமே, அல்லது நேரடியாக குடியரசு தலைவருக்கு அனுப்பி இருக்கலாம். மறுமுறை நிறைவேற்றிய பின் கவர்னர் ஏன் ஜனாதிபதிக்கு அனுப்பினார்.
குடியரசுத் தலைவர் மசோதாவை நிறுத்தி வைப்பதாக முடிவெடுத்தால், எப்போது திருப்பி அனுப்புவார்?
இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு கவர்னர் தரப்பு வக்கீல்களான மத்திய அரசு வழக்கறிஞர்கள் பதில் அளித்தனர். இதனை கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.