தஞ்சை மாவட்டம் திருவோணம் காவல் நிலையத்தில் ஏட்டாக இருப்பவர் வினோத்(35). இவர் கடந்த அண்டு அய்யம்பேட்டை காவல் நிலையததில் பணியாற்றியபோது, அந்த பகுதியை சேர்ந்த ஒரு திருநங்கையின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை செய்து வந்தாராம்.
இது குறித்து அந்த திருநங்கை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வினோத் மீது துறை ரீதியான விசாரணை நடந்து வந்தது. விசாரணையில் வினோத் மீது குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து வினோத்தை சஸ்பெண்ட் செ்து தஞ்சை எஸ்.பி. ஆசிஷ் ராவத் உத்தரவிட்டார்.