சென்னை தாம்பரம் காவல் ஆணையரகத்தில் துணை ஆணையராக(தலைமையிடம்,நிர்வாகம் )
பணிபுரிந்து வந்த முனைவர் பா.மூர்த்திபதவி உயர்வு பெற்று
அதே தாம்பரம் மண்டலத்தில் காவல்துறை துணைத்தலைவராக
பதவி உயர்வு பெற்று, சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். தாம்பரத்தில் இணை ஆணையர் பொறுப்பு இப்போது புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இணை ஆணையர் பா.மூர்த்தி, சேலம், திருச்சி, கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் எஸ்.பியாக பணியாற்றியவர்.