கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி கூட்டுரோட்டில் பாஜக தலைமை அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு இருந்தது. இதனை இன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திறந்து வைத்தார்.அதனை தொடர்ந்து, 5 அடி உயரக் கம்பத்தில் பாஜக கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த விழாவிலேயே திருச்சி, தருமபுரி, நாமக்கல், திருவள்ளூர், தூத்துக்குடி, தேனி, புதுக்கோட்டை, விழுப்புரம், விருதுநகர் ஆகிய 9 மாவட்ட பாஜக அலுவலகங்களின் கலெ்வெட்டுகளை அங்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியில் பாஜ.க. அலுவலகத்தை திறந்து வைத்த நட்டா பேசியதாவது: பாஜக அலுவலகம் 24 மணி நேரமும் திறந்த இருக்கும். தமிழகத்தில் விரைவில் பா.ஜக. ஆட்சியை பிடிக்கும். பாஜகவால் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சி தரமுடியும். பாஜகவில் மக்களுக்கான நேரடி ஆட்சியே நடக்கிறது. இங்கு வாரிசு அரசியல் கிடையாது. காங்கிரசின் மோசமான ஆட்சியால் மாநில கட்சிகள் தோன்றின. குடும்ப கட்சிகளுக்கு எதிராக பாஜக போராடி வருகிறது. காஷ்மீர் முதல் தமிழகம் வரை குடும்ப கட்சிகள் உள்ளன.
தமிழகத்தில் ஒரே நாளில் 10 பாஜக அலுவலகங்கள் திறக்கப்பட்டது இதுவே முதல்முறை. அனைத்து மாவட்ட தலைமையகத்தில், நவீன முறையில் பாஜக அலுவலகம் திறக்க அமித்ஷா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.