Skip to content
Home » மோடி மீண்டும் பிரதமராக வந்தால் தங்கம் விலை ரூ.2 லட்சம் வரை உயரும்.. ஜோதிமணி பேச்சு..

மோடி மீண்டும் பிரதமராக வந்தால் தங்கம் விலை ரூ.2 லட்சம் வரை உயரும்.. ஜோதிமணி பேச்சு..

தமிழகத்தில் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவொட்டி அனைத்து கட்சியினர் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை இறுதி பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட க.பரமத்தி வடக்கு ஒன்றியம்,புன்னம், குப்பம், வேலாயுதம்பாளையம், நொய்யல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும் பட்டாசு வெடித்தும் பூக்களை தூவி உற்சாகமாக வரவேற்பளித்தனர். 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.உடன் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, திமுக அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மீனா, இந்தியா கூட்டணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கூட்டத்தில் பேசிய இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி, இந்தியா கூட்டணி வெற்றி பெறும் ராகுல் காந்தி பிரதமர் ஆவார். 100 நாள் வேலை திட்டம் சோனியா காந்தி கொண்டு வந்த திட்டம். 15 நாட்களுக்கு ஒரு முறை ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது வேலைகள் குறைந்துள்ளது. காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் 100 நாள் வேலை திட்டத்திற்கு 400 ரூபாய் ஊதியம் உயர்த்தப்படும், விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும், கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும், புதிய கல்வி கடன்கள் கொடுக்கப்படும்,விவசாய விளைபொருளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யப்படும், வறுமையில் உள்ள குடும்பங்களை கண்டறிந்து ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய், மாதம்

8,500 வழங்கப்படும். படித்து முடித்த இளைஞர்களுக்கு ஒரு ஆண்டுகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ஒரு லட்சம் ஊதியத்துடன் வழங்கப்படும். ஒன்றிய அரசு பணிகளுக்கு பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு. பெண்கள் வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு சென்றால் தங்கும் விடுதி அமைக்கப்படும். இது போன்ற எண்ணற்ற திட்டங்களை அறிவித்துள்ளனர். உப்பு, சிலிண்டர்,அரிசி உள்ளிட்ட பல பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. நகை தற்போது 56 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்கள் தாலி மூக்குத்தி கூட வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற நிலைமைகள் மாற வேண்டும் என்றால் கைச்சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக வந்தால் தங்கத்தின் விலை இரண்டு லட்ச ரூபாய் வரை விலை சென்று விடும். தமிழக முதலமைச்சர் குடும்ப தலைவருக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கி உள்ளார். நமது நாடாளுமன்ற தொகுதியில் 140 பள்ளிக்கூடங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் போல் 2000 கோடி ஊழல் செய்யவில்லை. இந்தியாவில் விலைவாசி உயர்ந்துள்ளது. மோடியை பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுவாரா, பேசினால் எட்டு ஆண்டுகளுக்கு சிறை செல்வார்கள் என்ற பயத்தில் உள்ளனர் என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *