கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் அலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான விஜயை தனிப்படை போலிசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்தும் அவருடைய மனைவி, மாமியார் ஆகியோரிடம் இருந்தும் 95% த்திற்கும் மேல் நகைகளை போலிசார் மீட்டுள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளி விஜயை ஜே.எம் 2 நீதிமன்றத்தில் போலிசார் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்ராஜா விஜய்க்கு 26ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார். முன்னதாக உடல் பரிசோதனைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஜோஸ் ஆலுக்காஸ் குற்றவாளிக்கு 26ம் தேதி வரை நீதிமன்ற காவல்..
- by Authour
