Skip to content
Home » ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடை கொள்ளையனின் மாமியார் கைது…

ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடை கொள்ளையனின் மாமியார் கைது…

  • by Authour

கோவை மாநகர பகுதியில் வழிப்பறி மற்றும் திருடு போன செல்போன்களைக் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு போத்தனூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு காணாமல் போன செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

இதனைத் தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்

அப்போது பேசிய அவர், “கோவை போத்தனூர் சரகத்திற்கு உட்பட்ட மூன்று காவல் நிலைய எல்லைகளில் பொதுமக்கள் தவறவிட்ட 57 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாய்ஸ் மற்றும் கேல்ஸ் கிளப்புகளுக்கான போட்டிகள் நடைபெற உள்ளது. புகையிலையில்லா மாவட்டம் என்ற இலக்கில் அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம். இதுவரை மாநகர பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டு கடையின் வணிக உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.” என்றார்.

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்

மேலும், “மாநகர் முழுவதும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை வழக்கில் தேடப்படும் விஜயின் மாமியார் யோகராணியை தனிப்படை போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடமிருந்தும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்றார். இந்த வழக்கில் சுமார் 3 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், போலீஸார் இதுவரை இரண்டரை கிலோ நகைகளை மீட்டுள்ளனர்.

மேலும், தலைமறைவாக உள்ள கொள்ளையன் விஜயைப் பிடிக்க தனிப்படை போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கேனவே இந்த வழக்கு தொடர்பாக விஜயின் மனைவி நர்மதா கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *