சென்னை ஆவடி அருகே ஜிம் பயிற்சியாளராக இருந்தவர் ஆகாஷ் (25) ரத்தவாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். ஏற்கனவே அவரது 2 சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் இன்று இறந்து உள்ளார். ஆணழகன் போட்டியில் வெற்றி பெறுவதற்காக இவர் அதிகப்படியான ஸ்டீராய்டு(ஊக்கமருந்து) ஊசி செலுத்திக்கொண்டதால் உயிரிழக்க நேரிட்டதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.