Skip to content
Home » சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் உடலுக்கு ரஜினி அஞ்சலி …..

சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் உடலுக்கு ரஜினி அஞ்சலி …..

பிரபல சினிமா சண்டைப் பயிற்சியாளரும் நடிகருமான ஜூடோ ரத்தினம் வயது மூப்பின் காரணமாக  காலமானார்இ இவருக்கு 93 வயதான  ஜூடோ ரத்தினம் தனது சொந்த ஊரான குடியாத்தத்தில் வசித்து வந்தார். வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜூடோ ரத்தினம்  உயிரிழந்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், திரைப்பிரபலஙகள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அவரது ஜுடோ ரத்னத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். ஜுடோ ரத்னத்தின் உதவியாளர்கள் பலர் சண்டை பயிற்சியாளராக இருக்கிறார்கள். சண்டை பயிற்சியில் தனி பாணி உருவாக்கி சாதனை படைத்தவர் என ரஜினி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!