Skip to content
Home » ஜெயங்கொண்டம்…….போதையில் பணியில் இருக்கும் சார் பதிவாளர்…..பொதுமக்கள் புகார்

ஜெயங்கொண்டம்…….போதையில் பணியில் இருக்கும் சார் பதிவாளர்…..பொதுமக்கள் புகார்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பத்திர பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக இளம்பரிதி பணியாற்றி வருகிறார். இவர் அலுவலகத்தில் வேலை நேரத்தில் குடிபோதையில் இருப்பதாகவும், இதனால் பத்திரப்பதிவுகள் தாமதமாக நடப்பதாகவும் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில் ஜெயங்கொண்டம் அருகே கரடிகுளம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த நடராஜன்  என்பவர் தனது குடும்ப சொத்துகளை உடன் பிறந்தவர்களுக்கு சமமாக பிரித்து கொடுத்து பதிவு செய்வதற்காக  காலை 10 மணிக்கு பத்திர பதிவு அலுவலகத்திற்கு வந்துள்ளார். மாலை 5 மணி வரை காத்திருந்த விவசாயி நடராஜன், தாம் எழுதிய பத்திரத்தை சார் பதிவாளரிடம் கொடுத்துள்ளார்.

அப்போது மது போதையில் இருந்த  சார் பதிவாளர் இளம்பரிதி அதை வாங்கி படிக்காமலேயே பத்திரத்தில் தவறு உள்ளதாக கூறி விவசாயி நடராஜனை வெளியே செல்லுங்கள் என கூறியதாக தெரிகிறது. நீண்ட நேரம் காத்திருந்த விவசாயி நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர்  இதனால் ஆத்திரமடைந்து சார் பதிவாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் விவசாயி நடராஜன் ஈடுபட முயற்சி செய்தார். அப்போது அங்கிருந்த உறவினர்கள் இது தொடர்பாக  மேல் அதிகாரியிடம் தெரிவித்து சார் பதிவாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம் எனக்கூறி அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் காரணமாக ஜெயங்கொண்ட பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!