Skip to content
Home » ஜெயங்கொண்டம் …. ஊர்கூடி தூர்வாரினர்… கிராம மக்களின் நமக்கு நாமே திட்டம்

ஜெயங்கொண்டம் …. ஊர்கூடி தூர்வாரினர்… கிராம மக்களின் நமக்கு நாமே திட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சூரிய மணல் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசதி வருகின்றனர். அக்கிராமத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் பயன்பாட்டிற்காக வெட்டக்கிணறு ஒன்றை உருவாக்கினர். இதில் சூரிய மணல், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், குடிநீருக்காக இந்த கிணற்றை பயன்படுத்தி வந்தனர். மேலும் இந்த கிணற்று நீர் சுத்தமாகவும், சுவையாகவும் இருப்பதால், கோடை காலத்தில் நீண்ட தூரம் சைக்கிள் வந்துகூட குடிநீரை எடுத்துச் செல்வது இன்றளவில் வழக்கமாக உள்ளது என அக்கிராம மக்கள் பெருமிதத்தோடு தெரிவித்தனர்.

இப்படி பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க பழங்கால வெட்டக்கிணறு தோன்றியது முதல் இதுவரை தூர் வாரபடவில்லை. இதனால் ஊற்று நீர் சரியாக ஊற்றெடுக்க முடியாமல், சுகாதாரமின்றி தண்ணீர் கலங்கலாக மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்துள்ளது. இதனால் கவலையடைந்த பொதும க்கள் கிணற்றை தூர்வார வேண்டுமென அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்திருந்த நிலையில், யாரும் கிணற்றை கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த கிராம மக்கள் குடிநீர் தேவை கருதி பழங்கால கிணற்றை நாமே ஒன்று கூடி தூர் வாரினால் என்ன என்று அவர்களுக்கு தோன்றவே, தூர் வாரும் பணிகளை கையில் எடுத்தனர். பழங்கால கிணற்றில் சாரம் அமைத்து,  முறையான பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து, தூர் வாரும் பணிகளை மேற்கொண்டு, தற்போது அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். எல்லா உதவிகளுக்கும் அரசையே எதிர்பார்க்காமல், தாமாகவே முன்வந்து பழங்கால கிணறை மீட்டதன் மூலம் பிற கிராமங்களுக்கு முன்னுதாரணமாக சூரியமணல் கிராம மக்கள் உள்ளனர் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!