அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மணிவேல் தலைமை தாங்கினர்.
பாலுக்கான ஊக்கத் தொகையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி வழங்கவும், வேளாண் விளை பொருட்களுக்கு ஆண்டுதோறும் விலை அறிவிப்பது போல் பாலுக்கும் விலை உயர்த்தி அறிவிக்க வேண்டும், தமிழகத்தில் ஆவினுக்கு சொந்தமான அனைத்து தீவன ஆலைகளையும் முழுமையாக இயக்கி 50 % மானிய விலையில் உற்பத்தியாளர்களுக்கு தீவனம் வழங்க வேண்டும்,
ஜெயங்கொண்டம் நகராட்சியில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும், கடைவீதியில் சுற்றி திரியும் கால்நடைகளால் பூ வியாபாரிகள், பழ வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள் உள்ளிட்ட கடைகளில் கால்நடைகள் புகுந்து தின்று நஷ்டப்படுத்துவதை தவிர்க்கும் வகையிலும், விபத்தை தடுக்கும் வகையிலும் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.
ஜெயங்கொண்டம் வாரச்சந்தை கட்டுமான பணி நடைபெறுவதால் தற்பொழுது தற்காலிக மீன் மார்க்கெட்டில் (கோடபுல்லை குட்டையில்) போதுமான இட வசதி இல்லாததால் போக்குவரத்து நெரிசலும் வியாபாரிகளுக்கும் வாரச்சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் போக்குவரத்து நெரிசலும் இட நெருக்கடியில் சிரமப்பட்டு வருவதால் பெரிய அளவிலான மாற்று இடத்தை தேர்வு செய்து இட நெருக்கடியை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புகார் கொடுக்க வரும் மக்களை, போலீசார் கண்ணியமாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுட்டெரிக்கும் வெயிலில் நின்று பால் உற்பத்தி விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.