ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,ஜெயங்கொண்டம் – புதுச்சாவடி அருகில், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் அமையவிருக்கும் இடத்தில், கட்டுமான பணி தொடங்கப்பட உள்ளது. அந்த இடத்தை அரசு அலுவலர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் ஜி.ரமேஷ், பொதுப்பணித்துறை (தொழில்நுட்ப கல்வி) உதவி பொறியாளர் கார்த்திக், ஒப்பந்தகாரர் ஆர்.கண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.