Skip to content
Home » அரியலூர்: தாறுமாறாக வந்த கார் மோதி 7 பேர் காயம்

அரியலூர்: தாறுமாறாக வந்த கார் மோதி 7 பேர் காயம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் -விருத்தாச்சலம் ரோட்டில் கல்லாத்தூர் பகுதியில் இருந்து வேகமாக வந்த கார் 2 இருசக்கர வாகனம் மற்றும் 2 கார் என நான்கு  வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளது. இதில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மற்றும் காரில் வந்தார்கள் என 7 பேர் காயம் அடைந்தனர்.

இதில் ஜெயங்கொண்டம் ஜூப்ளி ரோட்டை சேர்ந்த சிவசூர்யா என்பவருக்கு கால் தொடை எலும்புமுறி ந்தது. கீழக்குடியிருப்பைச் சேர்ந்த ரியாஸ்கான் என்பவருக்கு நெஞ்சு எலும்பு முறிந்தது.  மகிமைபுரத்தைச் சேர்ந்த நரிக்குறவர் ஜெயபிரகாஷ் என்பவருக்கு கால் முறிந்தது.  3 பேரும்  எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து ஏற்படுத்திய காரை யார் ஓட்டி சென்றது என தெரியாத நிலையில் காரை கைப்பற்றி யார் விபத்தை ஏற்படுத்தினார் என்பது குறித்தும்,  கார் டிரைவர் குடிபோதையில் வந்தாரா? என்பது குறித்தும் ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பு மற்றும் சக வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.