Skip to content

ஜெயங்கொண்டம் …. பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி கஞ்சாவுடன் கைது…

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அலாவுதீன் நகரைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன். திருச்சியில் கோழிக்கடையில் வேலை செய்யும் இவர் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக திருச்சியில் இருந்து ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளார்- அப்போது போதையில் இருந்த ஜாகிர் உசேன் விருத்தாசலம் நோக்கி செல்வதற்காக புறப்பட்ட அரசு பஸ் எதிரே போதை ஆசாமி நின்றதாகவும் டிரைவர் ஒதுங்கி நிற்கும்படி கூறியதாகவும் கூறப்படுகிறது. இதில் போதையில் இருந்த ஜாகிர் உசேன் தன்மீது பஸ்ஸை ஏற்ற வருகிறாயா? எனக்கூறி பஸ் முன்னாடி செல்ல பஸ்ஸின் பின்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அரசு பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் ஜாகிர்உசேனை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் கையில் மறைத்து வைத்திருந்த 50 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பஸ் கண்ணாடி உடைத்த சம்பவம் பஸ் நிலையத்தில் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!