Skip to content
Home » பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்”…பொங்கிய ஜெயம் ரவி.!..

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்”…பொங்கிய ஜெயம் ரவி.!..

  • by Authour

மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள் இணையதளத்தில் உலா வருகின்றன. குறிப்பாக கோவாவை சேர்ந்த பாடகி கெனிஷாவுடன் ஜெயம் ரவியை இணைத்து கிசு கிசு கிளம்பியுள்ளது.

இது தொடர்பாக நிருபர் களிடம் ஜெயம் ரவி நேற்று கூறியதாவது, “கெனிஷா ஆன்மிகவாதி, சைக்காலஜிஸ்ட். அவருக்கு பெற்றோர் கிடையாது. மன அழுத்தத்தில் இருந்த பலரை அவர் குணப்படுத்தி இருக்கிறார். அவர் மிகவும் நல்லவர்.

பாடகியுடன் என்னை தொடர்புபடுத்தி பேசுவது, பேசியவர்களுக்குத்தான் அசிங்கம்.  நாங்கள் சேர்ந்து ஆன்மிக சென்டர் ஒன்றை தொடங்கவும் பேசினோம். அவரோடு ஒரு ஆன்மிக மையம் ஆரம்பிக்க முடிவு செய்ததை தகர்ப்பதற்காக இப்படி பேசுகின்றனரா என்று தெரியவில்லை. அதற்குள் என் மீது சேற்றை வாரி இறைக்க சிலர் நினைக்கிறார்கள்.

அதனால், எனக்கு எந்த நஷ்டமும் கிடையாது. காரணம், என்னைப் பற்றி, எனக்கு இந்த இடத்தை கொடுத்த மக்களுக்கு தெரியும். நான் எடுத்த விவாகரத்து முடிவு அவருக்கு தெரியாது என்பதில் எந்த லாஜிக்கும் இல்லை. அது எனது தன்னிச்சை முடிவு என ஆர்த்தி சொல்வது வியப்பாக உள்ளது. ஒன்றரை மாதங்களுக்கு முன்பே நான் அவருக்கு ஏற்கனவே இரண்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன்.

அவர்கள் வீட்டாரும் என்னையும் ஆர்த்தியையும் அழைத்து பேசினார்கள். எனது வீட்டிலும் பேசினார்கள். இப்படி இருந்தும் தனக்கு தெரியாது என்று அவர் கூறுவது ஆச்சரியமாக உள்ளது. மகன்களுக்காக அமைதியாக இருக்கிறேன். அவர்களை எப்போதும் கைவிட மாட்டேன்.

ஜூன் மாதம் கூட மூத்த மகனின் பிறந்த தினத்தை அவனுடன் சேர்ந்து கொண்டாடினேன். ஆர்த்தியை பிரிவது பற்றியும் மகனிடம் சொன்னேன். அம்மாவுடன் சேர்ந்து இருக்கலாமே என்றான். அவன் சின்ன பையன் என்பதால் அப்படி சொல்கிறான். எனக்கு என்ன நடக்கிறது என்பது எனக்குத்தானே தெரியும்.

நான் வீட்டை விட்டு போனது உண்மைதான். எனது காரை எடுத்துக்கொண்டு, பணம் கூட எடுக்காமல்தான் சென்றேன். இந்த விவகாரம் எனது வாழ்க்கையில் தடைக்கல் கிடையாது. ஸ்பீட் பிரேக்கர்தான். அதனால் இதை கடந்தும் வருவேன்” இவ்வாறு ஜெயம் ரவி கூறினார்.

இதனிடையே, ஜெயம் ரவி நடிப்பில் உருவான “பிரதர்” திரைப்படத்தின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்றார். விழா முடிந்து வெளியே வந்ததும் பத்திரிகையாளர்கள் அவரிடம், கெனிஷா பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதிலளித்த ஜெயம் ரவி , “ஒன்றே ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன் “வாழு வாழ விடு” என்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் யாரையும் இழுக்காதீர்கள். என்னையும் கெனிஷாவையும் தவறாக பேச வேண்டாம் வருங்காலத்தில் நானும் கெனிஷாவும் சேர்ந்து ஹீலிங் சென்டரை ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்” என்று கோபத்துடன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *