அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் பகுதியில் சிறிய அளவிலான கைத்தறி பூங்காவினை அமைக்கும் பொருட்டு துணிநூல் துறையின் தமிழ்நாடு பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான இடத்தினை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் நெசவாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காந்தி, தமிழ்நாட்டில் 10 சிறிய கைத்தறி பூங்கா அமைக்கப்படயுள்ளதாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதில் நான்காவதாக ஜெயங்கொண்டத்தில் இந்த பூங்கா அமைய உள்ளது. இன்னும் 3 மாதங்களில் பணி முடிவடைந்து 50 கைத்தறி அமைக்கப்பட்டு செயல்படயுள்ளது. குறைந்த பட்சம் 500 ரூபாயில் இருந்து கூலி வழங்கபடயுள்ளது. மேலும் நல்ல லாபம் பார்த்தால் இது கூலி 1200 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அமைச்சர் காந்தி கூறினார்.