அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உலகப் பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் சோழிஸ்வரர் கோயிலில் மாசி மாதம் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் உலகப் பிரசித்தி பெற்ற சோழிஸ்வரர் கோயிலில் மாசி மாதம் 8 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் 10ம் நாள் திருவிழாவாக தீர்த்தவாரி இன்று நடைபெற்றது. இதில் காலை யாகசாலையில் சிறப்பு யாக வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் சுவாமி அம்பாளை தோளில் சுமந்து சென்று தீர்த்தவாரி குளக்கரையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தீர்த்தவாரியில் புனித நீராடி வழிபாடு செய்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் அருகே சோழபுரம் சோழிஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி….
- by Authour
