அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தாதம்பேட்டை கிராமத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல் தலைமையில் நடைபெற்றது. கால்நடை உதவி மருத்துவர் பிரசாந்த், வாசுகி ஆகியோர் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் காங்கிரேஜ், ஓங்கோல், சாகிவால், எச் எப் ரக மாடுகள் மற்றும் குதிரை பல்வேறு வகையான நாய்க்குட்டிகள், கோழிகள் என பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் கால்நடை மற்றும் செல்லப்பிராணிகளை மருத்துவ முகாமில் காண்பித்து பயன் பெற்றனர்.
இந்த முகாமில் ஆடுகள் மாடுகள் கோழிகள் நாய்கள், குதிரைகள் உள்ளிட்டவைகளுக்கு தடுப்பூசி மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து மருத்துவ முகாமினை பயன்படுத்திக் கொண்டனர். இந்த முகாம் மூலம் சுமார் 1000 க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன.