அரியலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் ஜெயங்கொண்டம் போலீஸார் ஜெயங்கொண்டம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜெயங்கொண்ட சன்னதி தெருவில் ஜெயிலாபுதீன் என்பவர் மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட
புகையிலை மூட்டைகள் பிளாஸ்டிக் பொருட்கள் என 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடையை பூட்டி சென்றனர். இது குறித்து உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலிசார் ஜெயங்கொண்டம் நாச்சியார் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சகோதரர்களான ஜெய்லாபுதீன் மற்றும் முகமது கபீர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.