அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் ஜியோ கம்பெனியில் கன்ஸ்ட்ரக்சனாக பணியாற்றும் செங்குந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் கடந்த மாதம் 3ம் தேதி ஒன்றரை லட்சம் மதிப்பிலான காப்பர் ஒயர்களை ஜெயங்கொண்டத்தில் இருந்து அரக்கோணத்திற்கு ஜெயங்கொண்டத்தில் உள்ள மேட்டூர் பார்சல் சர்வீஸ் மூலம் அனுப்பியுள்ளார் ஆனால் இதுவரையிலும் காப்பர்
ஒயரானது சென்னை அரக்கோணத்திற்கு சென்றடையவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து பிரபாகரன் பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில் கேட்டபோது உரிய பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த பிரபாகரன் உள்ளிட்ட பணியாளர்கள் பார்சல் சர்வீஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.