Skip to content

ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார் இந்நிலையில் இவர் கடந்த மூன்று நாட்களாக வீட்டிற்கு வராத நிலையில் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர் எனினும் கருணாநிதி கிடைக்கவில்லை இதனையடுத்து இன்று அப்பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக

மிதப்பதாக தெரியவர இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களின் உதவியுடன் கிணற்றுக்குள் இருந்த கருணாநிதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் போலீசாரின் விசாரணையில் மது அருந்திவிட்டு கிணற்றின் சுவரில் உட்கார்ந்திருந்த போது தவறி உள்ளே விழுந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!