அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கு புதுக்குடி கிராமத்தில் உள்ளது அய்யனார் கோவில். இக்கோவிலில் பல தலமுறையாக வழிபாட்டு உரிமையை தலித் மக்கள் பெற்று வந்தனர் வழிப்பாட்டு உரிமையை பெற்ற தலித் மக்கள் பல கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். இக்கோவிலில் சமீபத்தில் குடமுழுக்கு விழா நடைபெற்றது அப்போதிலிருந்து ஏற்கனவே வழிப்பட்டு வந்த தலித் மக்களுக்கு வழிபாட்டு உரிமையை தர முடியாது என்று அக்கிராமத்தில் உள்ள மற்றொரு சமூகத்தினர் தடுத்தனர். இது குறித்து தலித் மக்கள் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கோட்டாட்சியர் ஆகியோர்களிடம் தொடர்ந்து மனு கொடுத்தும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கங்கைகொண்ட சோழபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் இந்த கோவிலுக்கு சொந்தமானவர்களுக்கு வழிபாட்டு உரிமையை வழங்க வேண்டும் இதற்கு தமிழ்நாடு அரசு மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து தலித் மக்கள் பல தலைமுறைகளாக வழிபட்டு வந்த கோயிலில் வழிபாடு செய்ய உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.