அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜான்சிராணி அறிமுகக் கூட்டம் நடைபெற்றது இதில் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது பிரச்சார வியூகம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜான்சி ராணி மக்களின் தேவைகளை நிறைவேற்றி தர போட்டியிடுகிறேன் சிதம்பரம் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதி மக்களின் இடர்பாடுகளை நேரில் கண்டறிந்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் நாங்கள் வெற்றி பெற்றால் இயன்றதை செய்வோம் இல்லையென்றால் எங்களால் முடிந்த அளவிற்கு மக்களுக்கு நல்லது செய்ய போராடுவோம் விலைவாசி உயர்வு வரி உயர்வு தண்ணீர் பிரச்சனை கால்வாய் பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் கிராமப்புறங்கள் அனைத்தும் நலிவுற்று உள்ளது எந்தவித அடிப்படை வசதியும் இல்லை இலவசம் மற்றும் பொய்யான வாக்குறுதிகள் அளித்து ஓட்டு வாங்கி விட்டு கோரிக்கைகளை நிறைவேற்றப்படாததால் வாக்காளர்கள் அதிருப்தியில் உள்ளனர் மாதம் ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு உதவி தொகை கொடுப்பதற்கு பதிலாக அவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேலை வாய்ப்பு அளிக்கலாம் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு வரி விலைவாசி உயர்வு மதுபானங்கள் மூலம் மீண்டும் அரசே ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொள்கிறது இந்நிலையை போக்க நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் தலைமையில் தொடர்ந்து மக்களுக்கான போராட்டங்களில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்