அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவல் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ஒருவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரித்ததில் அவர் ஜெயங்கொண்டம் தேவாங்கர் நடுத்தெருவை சேர்ந்த பாலமுருகன் என்பது தெரியவந்தது இதையடுத்து போலீசார் பாலமுருகனை கைது செய்து, அவர் கையில் வைத்திருந்த 8 லாட்டரி சீட்டுகள் பதிவு எண்கள் மற்றும் செல்போன் ரொக்கம் ரூபாய் 300 உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.