Skip to content
Home » ஜெயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி…

ஜெயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பெரியவளையம் கிராமம் மேலத் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன். பெரியவளையம் அரிசி குடோனில் மூட்டை தூக்கும் தொழிலாளியான இவர் பெரியவளையம் திருச்சி டு சிதம்பரம் பைபாஸ் சாலையில் வயல்வெளிக்கு சென்று விட்டு மீண்டும் பெரியவளையம் கிராமத்திற்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பாலகிருஷ்ணன் மீது மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சம்பவம் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் கதறி அழுது ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற ஜெயங்கொண்டம் போலீசார் இறந்து போன பாலகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பாலகிருஷ்ணன் மீது மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி விசாரித்து வருகின்றனர், இறந்து போன பாலகிருஷ்ணனுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். பாலகிருஷ்ணன் இறந்த சம்பவம் பெரியவளையம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!