அரியலூரில் இருந்து சுந்தரேசபுரம் சுத்தமல்லி வழியாக கும்பகோணத்திற்க்கு அரசு பஸ் காலை கிளம்பியது பஸ் சுந்தரேசபுரம் கிராமத்திற்கு வளைவில் திரும்பும்போது எதிரே சிமெண்ட் ஆலைக்கு நிலக்கரி ஏற்றி வந்த டாரஸ் லாரி பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அரசு பஸ் சாலை ஓரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோதி நின்றது மேலும் பஸ்ஸின் டீசல் டேங்கும் முழுவதும் சேதமடைந்தது எனினும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக
சேர்க்கப்பட்டனர்.சிறு சிறு காயங்கள் ஏற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் மீதமுள்ள 9 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற கயர்லாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்து நடந்த நேரத்தில் டாரஸ் லாரி டீசல் டேங்க் வெடித்துள்ளது அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி அனைத்துதால் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிக கனரக வாகனங்கள் அவ்வழியாக செல்வதால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டனர் பஸ் டாரஸ் லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவம் சுந்தரேசபுரம் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.