அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்துச்சேர்வாமடம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி ஜெயராணி தம்பதியரின் மகன் ராஜு (20) கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி தனது தாய் தந்தையருக்கு தெரிந்தே தனது வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கற்பமானார். இவர்களது விஷயம் தெரிந்து சிறுமியின் வீட்டில் சிறுமியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி மண்ணெண்ணையை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவாறு சிறுமி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி. கர்ப்பத்துக்கு காரணமான ராஜூ மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ராஜூவின் தந்தை சீனிவாசன் மற்றும் அவரது தாய் ஜெயராணி ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிந்து சீனிவாசனை கைது செய்து தலைமறைவாக உள்ள ராஜு மற்றும் அவரது தாய் ஜெயராணி ஆகியோரை தேடி விசாரித்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் அருகே கர்ப்பிணியான சிறுமி தற்கொலை முயற்சி…. வாலிபரின் தந்தை கைது..
- by Authour
