அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் ஆய்வு செய்தனர். ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள படுக்கை வசதிகள், தினசரி நோயாளிகள் புற நோயாளிகள் வருகை பதிவேடு உள் நோயாளிகள் இருப்பு அவர்களுக்கு தேவையான படுக்கை வசதி மற்றும் மருத்துவமனைக்கு தேவைப்படும் காலி பணியிடங்களாக உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டவற்றைப் பற்றியும் கேட்டறிந்தனர் மேலும் மருத்துவமனையில் மருந்து பிரிவில் போதிய
மருந்துகள் இருப்பில் உள்ளவை தேவைப்படும் மருந்துகள் ஆகியவற்றை கேட்டறிந்தனர். தேசிய பேரிடர் மேலாண்மை குழு அணி தலைவர் வீரகுமார் தலைமையில் தாசில்தார் கலியூர் ரஹ்மான் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது மருத்துவமனை தலைமை மருத்துவர் செந்தில்குமார் மற்றும் மருத்துவர் ராஜவன்னியன் தலைமை செவிலியர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.