கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள பாசிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்.
இவர் அரியலூர் மாவட்டம் கல்லாத்தூர் அருகே குளத்தூர் கைகாட்டியில் சித்த மருத்துவம் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் ஆங்கில மருந்துகளை பயன்படுத்தி மருத்துவம் பார்த்து வருவதாக ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனை மருத்துவருக்கு தகவல் கிடைத்தது
இது குறித்து ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் கலைச்செல்வன் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் காவல்நிலைய ஆய்வாளர் ராமராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர் விசாரணையில் உரிய அனுமதி இல்லாமல் ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரிய வந்தது இதனையடுத்து கார்த்திகேயனை போலிசார் கைது செய்தனர்.
மேலும் இவர் மீது உளுந்தூர்பேட்டை, மீன்சுருட்டி காவல் நிலையங்களில் இதே போல போலி மருந்துவம் பார்த்ததாக வழக்குகள் பதியப்பட்டு கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.