அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆவேரியை ஆழப்படுத்தி நடைபாதை அமைப்பதற்காக ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றது. ஆவேரி ஏரியை சுற்றி நடைபாதை அமைத்ததில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக, இரண்டு நாட்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து பாமக வழக்கறிஞர் பிரிவு பாலுவிற்கு வரப்பெற்ற புகாரைத் தொடர்ந்து, அந்த ஏரியை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் பாலு, ஏரியை சுற்றி நடப்பாதை அமைத்ததில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஊழல் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யவில்லை என்றால், உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்படும் என கூறினார்