அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 14ஆம் தேதி இரவு ஜெயங்கொண்டத்தில் உள்ள பயணியர் மாளிகையில் தங்குகிறார் 15ஆம் தேதி ஜெயங்கொண்டம் அருகே மகிமைபுரத்தில் அமைய உள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு அடிக்கல் நாட்டுகிறார் இதனையடுத்து அரியலூர் அருகே வாரணவாசி அங்கன்வாடியில் குழந்தைகளுடன் உரையாடும் முதலமைச்சர் அன்று மதியம் கொல்லாபுரம் பகுதியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் கலந்து கொண்டு அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்படையாற்றுகிறார் . ஜெயங்கொண்டம் பயணியர் மாளிகையில் 14ஆம் தேதி இரவு தமிழ்நாடு முதலமைச்சர் தங்கி ஓய்வு எடுக்க உள்ளார். இதற்காக பயணியர் மாளிகையில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது இப்பணிகளை நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க. கண்ணன் ஆகியோர் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.