Skip to content
Home » ஜெயங்கொண்டம் அருகே 13 வயது சிறுமி பலாத்காரம்….முதியவர் போக்சோவில் கைது

ஜெயங்கொண்டம் அருகே 13 வயது சிறுமி பலாத்காரம்….முதியவர் போக்சோவில் கைது

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே பெருமாள் தீயனூர் கிராமம் காலனித் தெருவை சேர்ந்தவர் அரியமுத்து (81). விவசாய கூலி தொழிலாளியான இவர், மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு வெற்றிலை பாக்கு போட்டுக்கொள்ள தருவதாக கூறி அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து முதியவர் அரியமுத்துவை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் முதியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாளாக உயர்ந்து வருவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!