அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகம் முன்பு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்க மாநில தலைவர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது.
இதில் தேர்தல் வாக்குறுதி அளிக்காத ராஜஸ்தான் சட்டீஸ்கர் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலத்தில் சிபிஎஸ் ஐ ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் சி பி எஸ். ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில். திமுகவின் 2021 தேர்தல் கால வாக்குறுதி 309ன் படி சிபிஎஸ் ஐ ரத்து செய்ய வலியுறுத்தியும், பணிக்கொடை வழங்க கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.