சிதம்பரம் அம்மாபேட்டை அனந்தராயன் தெருவை சேர்ந்த அறிவழகன் என்பவரும், அவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த குமார் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர், திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு, மீண்டும் சிதம்பரம் சென்றுள்ளனர். கிருஷ்ணகுமார் காரை ஓட்ட, குமார் மற்றும் அறிவழகன் இருவரும் பின்னால் உட்கார்ந்திருந்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தையடுத்த கங்கைகொண்ட சோழபுரம் அருகே, பொன்னேரி இறக்கத்தில் கார் சென்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே சிதம்பரத்திலிருந்து மதுரைக்கு இறால் ஏற்றி மினி லாரியும், காரும் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பாலத்து கட்டையில் மோதி பள்ளத்தில் விழுந்தது. விபத்தில் காரில் பயணித்த மூவரில் சிதம்பரம்
அம்மாபேட்டை அனந்தராயன் தெருவை சேர்ந்த அறிவழகன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டி வந்த கிருஷ்ணகுமார் காரில் பின் பக்கம் பயணம் செய்த குமார் ஆகிய இரண்டு பேரும் லேசான காயங்களுடன் உயிர்த்தபினர். காயமடைந்த இருவரும் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்த கோர விபத்தில் இறால் ஏற்றி வந்த மினிலாரி பின்பக்க இரண்டு சக்கரங்களும் பெயர்ந்து ஒருசைடாக சாலையில் சாய்ந்து கிடந்தது. சாலையில் சாய்ந்து கிடந்த மினிலாரியால் சுமார் 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் மினிலாரியை ஜேசிபி கொண்டு, சாலை ஓரத்தில் தள்ளி போக்குவரத்தை சீர் செய்தனர். கார் விபத்தில் இறந்து போன அறிவழகனின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்