அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆலோசனையின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் காணும் பொங்கலை ஒட்டி அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர் இதில் மது அருந்தி அதி வேகமாக வாகனம் ஓட்டிய 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களின் வாகனங்களை போலிசார் பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்த 12 இருசக்கர
வாகனங்களுக்கும் தல பத்தாயிரம் வீதம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையை செலுத்தி விட்டு வாகனங்களை எடுத்துச் செல்லலாம் என பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் போலீஸ் ஸ்டேசனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் வாகன உரிமையாளர்களிடம் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்வது தொடரும் எனவும் அபராதத்தை கட்டி வண்டியை எடுத்துச் செல்லுமாறு கூறி எச்சரித்து அனுப்பி வைத்தார்.