அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா ஜெயங்கொண்டம் துணை சூப்பிரண்டு அலுவலகம், அரசு தொடக்க பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், நியாய விலைக் கடை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அலுவலகங்களில் செயல்பாடு அடிப்படை கட்டமைப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார் மேலும் அரசு தொடக்கப் பள்ளியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மாணவர்களின் வாசிப்பு திறனையும் ஆய்வு செய்தார் இதில் சிறந்த வாசிப்பு திறன் உடைய மாணவனுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார் மேலும் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் குழந்தைகளின் உயரம் எடை அவர்களுக்கு வழங்கப்படும்
ஊட்டச்சத்து மற்றும் மதிய உணவு குறித்து ஆய்வு செய்து முறையாக குழந்தைகளுக்கு வழங்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இதேபோல் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலர் மையம், நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அந்தந்த துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் அடிப்படை கட்டமைப்புகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து உடையார்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெறுகிறார்.