Skip to content
Home » ஜெயங்கொண்டம்.. ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வெயிலில் காத்திருப்பு போராட்டம்…

ஜெயங்கொண்டம்.. ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வெயிலில் காத்திருப்பு போராட்டம்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் 18 ஆண்டுகளாக பணி செய்து வந்த தினக்கூலி ஒப்பந்த தொழிலாளர்கள் 30 பேரை பணிநீக்கம் ‌செய்த நிலையில். தனியார் ஒப்பந்ததாரர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து 3-வது நாளாக வேலை நிறுத்தம் செய்து, 3 பகல் 2 இரவாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படாததால், கோரிக்கை

நிறைவேறும் வரை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாகவும் துப்புரவு பணியாளர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் போராட்டக்காரர்கள் அமர போடப்பட்ட சாமியானா பந்தலை நகராட்சி நிர்வாகம் அகற்றி உள்ளது.

இருப்பினும் தங்களுக்கு உரிய நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். கொரோனா காலகட்டங்களில் உயிரை நுட்பமாக எண்ணி மக்கள் வீடுகளில் இருந்த போது வீதியை தூய்மை செய்து கொரோனா பரவலை தடுத்தமைக்கு நன்றி தெரிவித்த அரசு தற்போது வேலை பறிப்பதை வேடிக்கை பார்ப்பது வேதனையாக இருப்பதாக கூறுகின்றனர்.

இதில் மாவட்ட ஆட்சியர், ஆர்டிஓ தாசில்தார் தலையிட்டு உடனடியாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்ட கலெக்டர் இடம் மனு அளித்துள்ளதாகவும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். மேலும் நாளை தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!