அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லேரி கிராமத்திற்கு செல்லும் சாலையில் காட்டோடையின் குறுக்கே போக்குவரத்து பயன்பாட்டிற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தரை பாலம் அமைக்கப்பட்டது இப்பாலம் தற்போது சேதம் அடைந்த நிலையில் புதிய பாலம் கட்ட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் பாலம் கட்டும் பணி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தொடங்கியது ஆனால் இன்னமும் பணி முடிவடையாததால் பாலத்தை போக்குவரத்திற்கு பயன்படுத்தக்கூடிய பல்வேறு கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் விவசாயிகள் பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றிச்செல்ல வேண்டி உள்ளது இதனால் குறித்த நேரத்திற்கு பள்ளிக்குச் செல்ல முடியாமலும் வேலைக்கு செல்ல முடியாமல் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளது . எனவே ஆமை வேகத்தில் நடைபெறும் பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும், சாலையை செப்பனிட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் கல்லாத்தூர் -இரவாங்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது சம்பவம் அறிந்து வந்த ஜெயங்கொண்டம் போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆமை வேகத்தில் நடைபெறும் பாலப்பணி…. பொதுமக்கள் சாலை மறியல்…
- by Authour
